வேலூரில் ரூ.45.61 கோடியில் புதிய பேருந்து நிலையம்

 


வேலூர்,


   வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், சீர்மிகு திட்டத்தின்கீழ் ரூ.45.61 கோடியில் அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்படவுள்ளது.


அதே சமயம் புதிய பேருந்து நிலையத் தில் இயங்கி வரும் சென்னை மார்க்கம் மற்றும் திருப்பத்தூர் மார்கம் தவிர்த்து ஏனைய பேருந்துகள் அனைத்தும், பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்சென்னை திருப்பத்தூர் மார்க்கம் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு பக்கத்திலிருந்தும் 09.02.2020 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது


புதிய பேருந்து நிலையம் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டவுடன், அனைத்து புறபேருந்து வாகனங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.