5,000 ஆசிரியர்கள் ராஜினாமா

 பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது வேலைகளை ஓரே நேரத்தில் ராஜினாமா செய்தனர்.



கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 7, மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பாடங்களை கற்பிக்க  சுமார் 16 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமிக்கப்பட்டனர். 


பிற மாநிலங்களில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 10,000 வழங்கப்படுகிறது. எனவே தங்களின் சம்பள பணம் உயர்த்த பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இக்கேரிக்கையை ஏற்று அதிமுக அரசு அவர்களின் ஊதியத்தை 7,700 ஆக உயர்த்தியது. 


ஊதியம் உயர்த்தப்பட்டாலும் தங்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ , சுகாதார காப்பீடு . மகப்பேறு சலுகைகள் போன்ற சலுகைகள் கிடைக்கவில்லை என்றும் தங்களது பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும் முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.   அக்கோரிக்கைக்கு சரியான பதிலை அரசாங்கம் தர மறுத்ததால் 5000 ஆசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்தனர்