5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அறிவிப்பில் மாற்றம்

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில், இனி வரும் காலத்தில்  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை மற்றும் கோட்பாடுகளை தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதில் தேர்வு எழுதும் 5ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியில் தேர்வு எழுதாமல் 1கீ.மீ தொலைவில் உள்ள பள்ளியிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் 3கீ.மீ தொலைவிற்கு உட்படும் பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 


 இந்த அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகுந்த சலசலப்பை உண்டாக்கினது.


மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும். மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற மாட்டார்கள் என்று தொடக்க கல்வித்துறை அமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.