கடலூர்-
கடலூர் திருப்பா திரிப்புலியூர் பாலாஜி(27) அவரின் நண்பர்கள் கடலூரை சேர்ந்த சுபாஷ், காதர், பிரசாந்த், கார்த்திகேயன், ஆனந்தபாபு ஆகியோர் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் விடம் நேரில் புகார் மனு அளித்தனர்.
அதில் குறிப்பிட்டிருந்ததாவது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரை சேர்ந்த கோகுல்(27), நெய்வேலியை சேர்ந்த தென்னரசு, பண்ருட்டியைச் சேர்ந்த சதீஷ் பிரதீபா தம்பதி ஆகியோர் எங்களிடம் சிங்கப்பூரில் கப்பல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ரூ. 80 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பேருந்து நிலையத்தில் வாங்கி தருவதாக கூறி நபர் ஒருவருக்கு தலா ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் தருமாறு கேட்டனர். அதை நம்பி பாலாஜி ரூ 1 லட்சம், சுபாஷ், கார்த்திகேயன், ஆனந்தபாபு ஆகியோர் தலா ரூ. 75 ஆயிரமும், காதர், பிரசாந்த் ஆகியோர் தலா ரூ. 60 ஆயிரமும் ஆக மொத்தம் முதல் தவணையாக ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்தை ரொக்கமாகவும் வங்கி கணக்கிலும் செலுத்தினோம்.
பணம் கொடுத்து மூன்று மாதங்களாகியும் அவர்களிடமிருந்து பதில் இல்லை. அவர்களை தொடர்பு கொண்டபோது அதற்கான வேலை நடந்து வருவதாக கூறி சில ஆவணங்களை எங்களிடம் கொடுத்து சமாதானப்படுத்தினர்.
பின்னர், வேலை தொடர்பாக எவ்வித தகவலும் அவர்கள் கோகுல், சதீஷ் ஆகியோரை தொடர்பு கொண்டோம். அப்போதும் சரியான பதிலை வரவில்லை . இதனையடுத்து அவர்கள் கொடுத்த ஆவணங்களை பரிசோதித்த போது அத்தனையும் போலியானவை என்பது தெரியவந்தது.
பணத்தையும் எங்களுக்கு அவர்கள் திருப்பி தராமல் தலைமறைவாகிவிட்டனர். எங்களின் பணத்தை அவர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.