துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க-காரர்; துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி. என்று கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தினை எதிர்த்து நெட்டிசன்கள் சமுக வலைதலங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் வட்டாரத்தில் ரஜினி கூறியக் கருத்து பேச்சுப்பொருளானது. முரசொலிப்பற்றி தவறான கருத்தை வைத்தால் திமுகாவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ரஜுனியின் கருத்தை பற்றி விளக்கம் கேட்டப்போது இதுக்குறித்து பேசிய அவர் ‘’நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும். அதிமுக நாளேடு குறித்து பேசாததற்கு ரஜினியிடம்தாம் விளக்கம் கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.