பிரதமர் மோடி மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!

நாட்டையே உலுக்கி கெண்டு இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத கொலை வெறிக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.



இந்நிலையில் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே ‘ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் அமித் ஷா மற்றும் மோடி என்ன விரும்பினார்களோ அதுதான் நடந்தது என்று குற்றச்சாட்டி உள்ளார். மேலும் உத்தவ் தாக்கரே மாணவர்கள் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதல் 2002ல் டெல்லியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துகிறது என்றார். 


இதனைத் தெடர்ந்து உத்தவ் தாக்கரே நாடு ஆபத்தில் உள்ளது என்றும் பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்து என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.