செங்கல்பட்டு, ஜன.7- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூரில் நேற்று வளர் கலை நாட்டியாலயா சார்பில் ஆறாம் ஆண்டு சலங்கை பூஜை விழா நாட்றாம்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாணவிகள் பூஜை செய்து தங்கள் குருவிற்கு காணிக்கை அளித்து குருவின் கையால் சலங்கை அணிந்து கொண்டனர். நாட்டியாலயாவில் பயின்ற மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் பரதநாட்டியத்தில் தாங்கள் கற்றவைகளை நிரூபிக்கும் வண்ணமாக மேடையில் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.