திருப்பத்தார் மாவட்டத்தில்- பொங்கல் பரிசு பொருட்கள் , 861 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

திருப்பத்தூர், ஜன.7-


    தமிழக அரசு பொங்கல் பரிசு திட்டத்தை கடந்த 28.11.2019 அன்று தமிழக முதலமைச்சரால் துவங்க ப்பட்டது. அதை தொடர்ந்து ஜோலார்பேட்டை பகுதியி லுள்ள இடையப்பட்டி, சோலையூர், கோடியூர் ஆகிய பகுதிகளில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு பொருளை தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்.


         


    மாவட்ட ஆட்சியர் சிவனருள் இதில் திருப் பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 547 நியாயவிலை கடைகளில் சுமார் 3,12,971 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.


   இதில் தற்போது ஜோலார் பேட்டை வட்டாரத்தில் செயல்படும் தென்னிந்திய ரயில்வே கூட்டுறவு பண்டக சாலையில் நடத்தும் இரண்டு நியாயவிலை கடைகளில் 861 குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கப்பட்டது.


   இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் செல்வ ம், ஜோலார்பேட்டை நகர செயலாளர் சீனிவாசன், திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி. குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் திரளாக பயனாளிகள் பங்கேற்றுள்ளனர்.