பாண்டிச்சேரியில் லி ராயல் பார்க் ஹோட்டலில் தன்னார்வ தொண்டுகளை பாராட்டி விருது 

     


செங்கல்பட்டு -


     செங்கல்பட்டு, மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலடங்கிய மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சி அ.இ.அ.தி.மு.க ஊராட்சி கழக செயலாளர் கி.துளசி ங்கம் வயது 69, தனது பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த, நலதிட்ட உதவிகளை செய்து வருகிறார்.


     இது தவிர ஆன்மிக பணிகளும் செய்து வகின்றார். ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்ந்த நலதிட்ட உதவிகள் பெற்றுதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதனால் அவரின் தன்னார்வ தொண்டுகளை பாராட்டி அமெரிக்காவின் GLOBAL PEACE பல்கலை கழகம் சார்பில் உயரிய விருதான கௌரவ டாக்டர் பட்டம் பாண்டிச்சேரியில் உள்ள லி ராயல் பார்க் ஹோட்டலில் நடந்த விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.