டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் -காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

சென்னை , ஜன.8


    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போரா ட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் நேற்றையை முன்தினம் முகத்தில் துணியை கட்டி கொண்டு வந்து அத்துமீறி விடுதி உள்ளே நுழைந்து மாண வர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சமூக விரோதி கும்பலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.


                         


   சமூக விரோதி கும்பல் தாக்கியதில் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ் மற்றும் 18 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆகவே மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சமூக விரோதி கும்பலை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.


   எனவே, மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்து ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கம் வேண்டும். இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைப்பெறாமல் தடுக்க மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி ஜனநாயக வழியில் போராடும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.