உத்திர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கேஷ்ப் பிரசாத் தலைமையில் நேற்று ஆதரவு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ரகுராஜ் சிங் கலந்துக்கொண்டனர்.
மந்திரி சபையில் பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங் “ ஒரு கூட்டத்து மக்கள், எங்கள் வரிகளிலே சாப்பிட்டு, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றார். மேலும் அவர் பேசுகையில் பிரதமர் மோடி மற்றம் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினால் அவர்களை உயிருடன் புதைப்பேன் என்றும் இந்த நாடு அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமான நாடு என்று கருத்து தெறிவித்தார். சமுக வலைத்தலத்தில் இக்கருத்திற்கு எதிர்ப்புக்குரல் வலுத்து வருகிறது.