பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

       


கடலூர், ஜன.22


     சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.


    இதில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார்.


     பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போக்குவ ரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ராமஜெயம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


     பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். பேரணி பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி இந்திராகாந்தி சாலை, லிங்க் ரோடு, காந்திரோடு, ராஜாஜி சாலை, வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது.