வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு கழுதையில் சென்ற பொங்கல் பரிசு

 


         


      வாணியம்பாடி-


        7 கிலோமீட்டர் தூரம் உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு பொங்கல் பரிசுகளை கழுதைகள் மீது ஏற்றி செல்லப்பட்டது.


     திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அருகே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெக்னாமலை மலை கிராமத்திற்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை,கரும்பு உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை மலை கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் அவர்களுக்கு வினியோகம் செய்ய வட்டாட் சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதி ஆகியோர் கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் சென்றனர்.