ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில் அருகே பல மாணவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த இடையூரு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும் மாணவ அமைப்பினருக்கும் வாய் போர் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகியான நரேஷ் என்பவர் மாணவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரி, நரேஷை தாக்கினார். கே. எஸ். அழகிரி நரேஷை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.