மக்கள் தொகை பதிவேட்டை கொண்டு வந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் - கேரள முதலமைச்சர்

இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  மக்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனார். இதற்கிடையே குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள அண்டை நாட்டவர்களை வெளியேற்றம் அடிப்படையில் மக்கள் பதிவேடு பணிகளை மத்திய அரசு தொடங்க உள்ளது.



மக்கள் பதிவேட்டுப் பணிகள் எல்லாவற்றையும் நிறுத்தி வைக்குமாறு கேரள முதலைமைச்சர்  பினராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார்


மேலும் கேரள அரசு தங்கள் மாநிலத்தில் மக்கள் பதிவேடு தொடர்பாக பணிகள் தொடங்கவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றார்


மாநில அரசின் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.