திருப்பூர், ஜன.7-
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்க ளாக நடைபெற்றன.
தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் தேர்தலில் திமுக கூட்டணி 8 இடங்களையும் அதிமுகவினர் 3 இடங்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
அதே சமயம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.வி.செந்தில்குமாருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து பதவி ஏற்பு விழா நடைப்பெற்றன.
இவ்விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, சசிகுமார், சீதாலஷ்மி, கலைச்செல்வி, செல்வி, வேதநாயகி, சுகப்ரியா, செந்தில்குமார், தெய்வசிகாமணி, துர்கேஸ்வரி, சிலம்பரசன், பழனிச்சாமி ஆகியோருக்கு தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் அந்தந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.