திருப்பத்தூர், ஜன.7-
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுக்கா ராமகிருஷ்ண மடம் அருகில் 30 வருட காலமாக செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி பொதுமக்களின் வசதிக்காக தற்போது நாட்றம்பள்ளி வாணியம்பாடி சாலையில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தனியாருக்கு சொந்தமான விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கட்டடத்தில் நேற்று இந்தியன் வங்கி பொது மேலாளர் சந்திர ரெட்டி தலைமையில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சந்திரா ரெட்டி ஜி.எம். சென்னை மாயா டி.ஜி.எம். ராஜேந்திரன் ஏ.ஜி.எம் வேலூர், கௌரிசங்கர் ஏ.ஜி.எம், வேலூர் சாய் விஜய் பிரசன்னா மேலாளர் நாட்றம்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஜி ரமேஷ் நாட்றம்பள்ளி முன்னாள் ஒன்றிய சேர்மன் மல்லகுண்ட ராஜா மற்றும் அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.