உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17ம் தேதி நாடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு மாடுபிடிவீரர்களுக்கு அனுமதிசீட்டு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இதனையொட்டி மாடுபிடிவீரர்கள் அதிக எண்ணிக்கையில் வர தொடங்கினர்.இதுவரை 700 மாடுபிடிவீரர்களுக்கு மட்டுமே அனுமதிசீட்டு வளங்கப்பட்டது 21 வயதுக்கு மேலும் 40 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே அனுமதிக்க படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களின் உடல் எடை , மருத்துவ பரிசோதனை என அனைத்தும் எடுக்கப்பட்டு பின்னர் தகுதியுள்ளவருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.