பரமக்குடியில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

பரமக்குடி-


      ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மோடி அரசை அகற்றிட கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


 


      போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பொது வினியோக திட்டத்தை பலப்படுத்துவது, வேலை யின்மையை போக்குவது, காலி பணியிடத்தை நிரப்பவது, புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவது, 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க போன்ற பல்வேறு கோரிக் கைகள் இடம் பெற்றன.


      பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் துவங்கி ரயில்வே பீடர் ரோடு அருகே உள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தை முற்றுகை யிட போராட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மோடி அரசை கண்டித்து கோஷங் களை எழுப்பினர். பின்னர் சாலையில் ஊர்வலமாக வரும்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.


      போராட்டத்தில் ஐ.என். டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, கைச். எம்.எஸ், சி.ஐ.டி.யூ, எல்.பி.எப், ஏ.ஐ.சி.சி.டி.யூ, எம்.எல்.எப், எஸ்.ஓ.டி.யூ, டி.டி.எஸ்.எப் போன்ற தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர்.