ராகுல் இதை செய்தால், அவர் கூறுவதை நான் ஏற்பேன் - ஜே.பி.நட்டா

  குடியுரிமை சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டம் உத்திர பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் பாஜக தலைவரான ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். 


 


அவர் பேசுகையில்-  குடியுரிமை சட்டம் மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் இந்த சட்டத்தினால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. 


இச்சட்டத்தினைப் பற்றி பலர் தவறான புரிதலால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். இச்சட்டத்தை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. 


மேலும் இச்சட்டத்தை எதிர்க்கும் ராகுல் காந்தி, குடியுரிமை சட்டத்தைப் பற்றி ஒரு 10 வரிகள் பேசட்டும் அவ்வாறு பேசினால் அவர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.