இந்திய செய்தித்தாள் சங்கத்தின் சம்மனின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி 'இந்திய செய்தித்தாள் தினமாக' அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் செய்தித்தாள் அச்சிடப்பட்ட நாள் இன்று.
கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லயம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். பின்னர், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி.1550-இல் அறிமுகம் செய்துவைத்தனர். அதன்பின்,1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக THE WEEKLY NEWSPAPER வெளியிடப்பட்டது.பின்,LONDON GAZETTEER என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது.
இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது.இந்தியாவில் 1780-இல் BENGAL GAZETTEER,1789-இல் INDIAN GAZETTEER போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன.தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்' வெளிவந்தது. பிறகு,1853-ஆம் ஆண்டில் 'தின வர்த்தமானி' என்னும் தமிழ் வார இதழ் வெளியானது. கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள்,வார,மாத இதழ்கள் வெளிவர தொடங்கின.