பொங்கல் விடுமுறைக்கு பயணிகள் செல்வதற்காக சிறப்பு பேருந்து அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு, ஜன.8-


     செங்கல்பட்டு மாவட்டம், பொங்கல் விடுமுறைக்கு பயணிகள் செல்வதற்காக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடங் களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். 2019 ஆம் ஆண்டின் (மகல் கமிழர் திருநாளாக பொங்கல் விழா இந்தமாதம் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


       


    இதற்கான விடுமுறை தினத்தில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னை யில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.


    கடந்த ஆண்டு வரை வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளம்பாக்கம் கிராமத்தில் சிஎம்டிஏவுக்கு சொந்த ணமான, 88 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை சர்வதேச தரத்தில் அமைக்க சிஎம்டிஏ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


    சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் வண்ட லூர் கேளம்பாக்கம் சாலை வழியாக பேருந்து நிலையத்து நிலையத்துக்கு வருவதற்கு ஏற்றார்போல் நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்தே இடத்தில் தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    பயணிகளுக்கு போதிய வசதிகளுடம், சென்னையில் இருந்து முன்பதிவு மற்றும் பதிவில்லா பேருந்துகள் வந்த ஏதுவாக செல்லக்கூடிய அனைந்து பேருந்துகளை நிறுத்தும் வகையில் இடம் தேர்வு செய்ய மறைமலை நகர் அருகே உள்ள மைதானத்தை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந் திரன், கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன், மறைமலைநகர் காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பார்வை ஈட்டனர் உடன் உதவி ஆய்வா ளர்கள், அரசு ஊழியர்கள் இருந்தனர்.