திருப்பத்தூர்,
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என மிரா டைம்ஸ் சுதா குமார் தெரிவித்துள்ளார்.
இலவச டிக்கெட் பெற்றுக்கொள்ள ரசிகர்கள் ஆம்பூரில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை சேகரித்து சுதா குமாரிடம் கொடுத்தால் ஒவ்வொரு அரைக் கிலோ பிளாஸ்டிக் கழிவிற்கும் ஒரு ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இத்தகவலை அறிந்த பொதுமக்கள் சுமார் 15 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து சுதா குமாரிடம் கொடுத்து இலவச டிக்கெட்களை பெற்றுக்கொண்டனர்.
மிரா டைம்ஸ் சுதா குமாரின் சமுக நலனை “இது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒரு வித்தியாசமான முயற்சி” என பொது மக்கள் பாராட்டினர்.