தேனியில் பருத்தி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது

   


தேனி,


     தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டார பகுதியான தாமரைக்குளம் ஜெயமங்கலம் மேல்மங்கலம் ஏருமலை நாயக்கன்பட்டி தேவதானப்பட்டி குள்ளபுரம் சில்வார்பட்டி காமாட்சிபுரம் வடவீரநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் நடப்பு ஆண்டில் பரவலாக பருத்தி சுமார் 450 எக்டர் மானாவாரி மற்றும் இறவையில் பயிர் இடப்பட்டுள்ளது.


      கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் மழை அதிகளவு பெய்துள்ளதால் மானாவாரி பருத்தி அதிக பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


      தற்போது பருத்தி பூக்கும் பருவம் முதல் காய்க்கும் பருவத்தில் உள்ள பயிர்கள் மீது தொடர்மழை வெயில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் பூச்சி நோய் தாக்க வாய்ப்புள்ளது. மேலும் எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதல் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.


      சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் சாறை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பகுதி மேல்நோக்கி சுருண்டு வெளிரி முற்றிலும் இலைகள் காய்ந்து காணப்படும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிகுறிகள் தென்படும் இடங்களில் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு எக்டர்க்கு பாஸ்போமிடான் 40எஸ்.எல் அல்லது அசிடாமிபிரிட் 20 சதவீதம் எஸ்.பி 50 கிராம்,புரபனோபாஸ் 25 சதவீதம் எஸ்.எல் 100 மிலி டைமெத்தோயேட் 30 சதவீதம் இ.சி 100 மிலி குளோரிபைபாஸ் 20 சதவீதம் இ.சி 250மிலி இதில் ஏதேனும் ஒரு மருந்தை அடித்து பூச்சிகளை கட்டுக்குள் வைக்க பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சி.சென்ராயன் பருத்தி விவசாயிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.