ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு பிறகு அங்கு பாதுகாப்புகாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்களை திரும்பப் பெறுவதென மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வன்முறைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு வாபஸ் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு.