கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஓமன் சுல்தானாக பதவி வகித்து வந்த காபூஸ் பின் சையத் அல் சையத் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.
இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் முதல் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டது. `
சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
''ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக சுல்தான் காபூஸ் திகழ்ந்தார்” என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.