உளுந்தூர்பேட்டை, ஜன.7-
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 264 குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த குடியிருப்பு அடுக் குமாடி வீடுகளை கள்ளக் குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரன் கிராலா மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டம் ன்ற உறுப்பினர் குமரகுரு எம்.எல்ஏ ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கட்டிட பணிகளின் உறுதித் தன்மை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அப்போது தாசில்தார் காதர் அலி, குடிசை மாற்று வாரியம் உதவி கோட்டப்பொறியாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, முன்னாள் பேரூரா ட்சி கவுன்சிலர்கள் சியாமளா ராஜா குணசேகரன் அதிமுக நிர்வாகிகள் கஜேந்திரன் ராஜ்குமார் அதிமுக வக்கீல்கள் திலீப் ஆனந்த், பேரவை நிர்வாகி சாய் அருண், பிள்ளை ளயார் குப்பம் தயாநிதி, கிள்ளனூர் சீதாராமன், கிளியூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.