சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் அரசு சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என பல அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் என ஜெயக்குமாரின் துறையை தவறுதலாக கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்தினார்.
பின்னர் , அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரையும் ஜெயராமன் என மீண்டும் தவறுதலாக கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், "பசி மயக்கமா" என கேட்க, அமைச்சர் சரோஜாவும் "ஆம் பசி" என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
சக அமைச்சரின் பெயரையும், துறையையும் கூட அமைச்சர் சரோஜா தெரிந்துக்கொள்ளவில்லை என்று அரசியல் வட்டாரம் கூறுகிறது குறிப்பிடத்தக்கது.