திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட துணை மின் நிலையம் தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜியோதி யோஜனா திட்டத்தின் 3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 33 கிலோவாட் துணைமின் நிலையத்தை முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்துவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சிவனருள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். திருப்பத்தூர் மின் மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலாசகாயமேரி, செயற்பொறியாளர் கிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி. ரமேஷ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி. குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விவசாயிகளின் நலன் கருதி 33 கிலோ வாட் கொண்ட மின்சாரம் குணிச்சி பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு 11 கிராமங்கள் கொண்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குனிச்சி, செவ்வாத்தூர், வெங்கடேஸ்வர புரம், சூ.பள்ளிப்பட்டு, தாயப்பன் நகர், கசி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டது.