முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

சென்னை,


     தேசிய அளவிலான கெய்லோ யுத் விளையாட்டு போட்டிகள் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி நகரில் நடைபெற்று வருகிறது.


இதில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி சார்பில் 11ம் வகுப்பு பயின்று வரும் பிரதீப் 17 வயதிற்குட்பட்ட 800 மீட்டர் ஒட்டப்பந்தத்தியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவர் இந்த தூரத்தை 1 நிமிடம் 52 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.


  தங்கம் வென்ற மாணவன் பிரதிபுக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களும் பாரட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு சிறப்பு ஊக்கப்பரிசுகளும் வழங்கவும் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்துள்ளனர்.