வாணியம்பாடியில் காவல்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடி, ஜன.7-


    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் துணை கண்காணி ப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.


   


   காவல் துணை ஆய்வாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகரப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதும், அதனை தடுக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.


   அப்போது நகர காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் கூறியதாவது, சி.எல் சாலை, வார சந்தை, பஜார் தெரு, பூக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை கடை முன்பு நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்த வேண்டும்.


   அப்போதுதான் கடைமுன் வாடிக்கை யாளர்கள் தங்களின் வாகனங் களை நிறுத்த முடியும். இது ஒரு வகையில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியும் என்று வணிகர்களுக்கு எடுத்துரைத்தார்.


   கூட்டத்தில் வணிகர் சங்கம் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் வெங்கட்ராமன், செல்வமணி உட்பட வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர், லாரி டிரான்போட் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.


   நிகழ்ச்சியில் நகர துணை ஆய்வாளர் விஜயகுமார், சவுந்தர்ராஜன், குமார், ராமன், சோமு, கருணாகரன், காவலர் தனலஷ்மி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவலர் தனலஷ்மி நன்றி கூறினார்.