திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஓட்டை விழாதா என குள்ளநரி சக்திகள் ஏங்குகின்றது - மு.க.ஸ்டாலின்

   ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டது. கருத்து வேறுப்பாட்டால்  திமுக, காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது.



  இதனை உறுதி செய்வதுப்போல திமுக பொருளாளர் துரைமுருகன் "கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை” என்று கருத்து கூறினார். இக்கருத்தினால் இருக்கட்சிகளிடையே மிகுந்த சலசலப்பு  ஏற்பட்டது. 


   இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று சந்தித்து பேசினர்.


    இவர்களுடனான சந்திப்பு முடந்தவுடன் ஸ்டாலின் திமுகாவினர் யாரும் கூட்டணியை பற்றி பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில்  ஓட்டை விழாதா என குள்ளநரி சக்திகள் ஏங்கிக் கொண்டுக்கின்றது. என அறிவித்தார். 


  இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி செய்தியாளர்களை சந்தித்து இனி இருக்கட்சிகளும் இணைந்தே செயல்ப்படும் என்று தெரிவித்தார்.