சென்னை,
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்க கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர், செக்கானுரணி ஊத்து பட்டியைச் சேர்ந்த செல்ல பாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே உள்ள கக்காம்பட்டியை சேர்ந்த பழனியான்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங் குறிச்சியை அடுத்த மோட்டாங் காட்டை சேர்ந்த உத்தர குமார் ஆகிய நான்கு பேர் ஜல்லிகட்டில் காளைகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
இனி வரும் காலங்களில் ஜல்லிகட்டில் காளைகளை அடக்க களம் இறங்கும் வீரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஜல்லிகட்டை வேடிக்கை பார்க்கும் பொது மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாகவும் பார்க்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் தை திரு நாளில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிகட்டு காளைகளை வீரர்கள் அடக்கி தமிழர்களின் பாரம்பரியத்தையும் பெருமையையும் சேர்த்துள்ள வீரர்கள் அனைவருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
ஜல்லிகட்டில் உயிரிழந்துள்ள ஸ்ரீதர், செல்லபாண்டி, பழனியாண்டி, உத்தரகுமார், ஆகிய நான்கு பேரின் குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே, ஜல்லிகட்டில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை தலா பத்து லட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.