சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு உள்ளதால் தேர்தல் செல்லாது என வாக்கு எண்ணுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்கு பின்னரே தேர்தல் நடத்தினதாலும். இந்த தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளது. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது என உத்தரவிட்டுள்ளது மேலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.