பாஜக தலைமை பதவிக்கு ஜே.பி.நட்டா வேட்புமனு தாக்கல்

  புதுடெல்லி,


       பாஜக செயல் தலைவராக பதவி வகித்து வந்த ஜே.பி.நட்டா சார்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமை பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 


     


     2019ம் ஆண்டில் நடைப்பெற்ற தேர்தலில் அமித்ஷா தலைமையில் பாஜக இமாலய வெற்றியை பெற்றது. கட்சியை வெற்றி பாதையில் கொண்டு சென்றதற்காக அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனார். இருப்பினும் அவர் கட்சி பொறுப்பில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல் தலைவராக ஜே.பி.நட்டா பொறுப்பெற்றார். 


   ஜே.பி.நட்டா 2014ம் ஆண்டில் பாஜக அரசில் சுகாதார அமைச்சராக இருந்தவர். நடந்து முடிந்த 2019ம் தேர்தலில் வெற்றிபெற பல வியூகங்களை அமைத்து தந்தவர். 


    இந்நிலையில்,  இன்று 12 மணி முதல் 2 மணி வரை பாஜக தலைமை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. 


    இதுவரை ஜே.பி.நட்டாவிற்கு போட்டியாக  யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி பாஜக தலைமை பதவிக்கு ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.