கோத்தகிரி-
ஜனவரி கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறையில் பல ஊழல்கள் நடப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத் தகிரி எல்லைக்கு உட்பட்ட தவிட்டு மேடு பகுதி யில் நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மாலை நேரத்தில் சாலையின் நடுவே குழிதோண்டி பள்ளி மாணவர்களுக்கும், வெளியூர் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பொறுப்பற்ற நிலையில் செயல்படும் நெடுஞ்சாலைதுறை எந்த முன்அறிவிப்புமின்றி சாலை முழுவதுமாக குழிதோண்டி குழாய்பதிப்பது. ஒரு வகையில் அப்பகுதி பொது மக்களுக்கு உபயோகமாக இருந்தாலும் வெளியூர் பயனிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மழைக் காலங்களில் ஒரு வழி சாலையாக இந்த சாலையைதான் பயன் படுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் இது போன்ற பணிகளை மேற்கொண்டால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் சிரமமின்றி செல்லலாம் என்றும் நெடுஞ்சாலைத் துறை சற்று பொறுப்புடன் நடந்தால் நலமாக இருக்கும் என்று அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும் ஓட்டுனர் புலம்புகின்றனர்.