குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்,
மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நான் தனியாக போராட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் மம்தா கூறுகையில், காங்.,மற்றும் இடதுசாரி கட்சிகள் கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வருகின்றன. இவர்களுடன் நான் கைகோர்க்க விரும்பவில்லை. எந்த கட்சியுடனும் சேராமல் தனியாக போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.