புது டெல்லி;
2019-2020 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை குறித்து நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களை சந்தித்து ஆலேசனை நடத்தினார் பிரதமர் மோடி.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளாதார வளர்ச்சியை குறித்து ஆலேசனை நடத்தினார் பிரதமர் மோடி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற கேபினட் மந்திரிகளும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், சி இ ஒ அமிதாப் காந்த் மற்றும் பிற நிபுணர்கள் கலந்து கொண்டனர்.