தமிழக முதலமைச்சரை பாரட்டி துணை ஜனாதிபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிரமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு, பொது மக்களுடன் இணைந்து பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் வயலில் இறங்கி நெற் பயிர்களை அறுவடை செய்தார்.
முதல்வர் பழனிசாமியை பேட்டி எடுக்க சென்ற செய்தியாளர்கள் இதனை வீடியோ காட்சியாக பதிவு செய்து ஊடகங்களில் பதிவு செய்தனர். மேலும் இந்த வீடியோவை 'முதல்வன்' என்ற பெயரில் யூ- டியுப்பில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து பாராட்டினர்.
இந்நிலையில் நேற்று முதல்வரின் செயலைப்பாராட்டி துணை ஜனாதிபதி ட்விட்டரில் மண் மனம் மறக்காத முதலமைச்சர் என்றும் அவரின் செயல் மனதை மிகவும் மகிழ்விக்கிறது.
இச்செயலால் பலருக்கும் அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். எல்லாரும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார் .