சிதம்பரம், ஜன.7-
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திங்களில் ஆருத்ரா தரிசனம் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வரும் 09-01-2020 மற்றும் 10-01-2020 ஆகிய இரு நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருகோவிலூர், செஞ்சி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.