கோவை,
வணிகங்கள் மற்றும் வாகன ஆப்ரேட்டர்கள் எதிர்கொள்ளும் வாகன மேலாண்மை சவால்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாக தொழில் மேம்பாட்டிற்கு சிறந்த ஒத்துழைப்பு அளித்து வரும் நிறுவனமான ஷெல் நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட வாகன மேலாண்மைக்கான தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் முக்கிய நோக்கமே வாகன உரிமையாளர்களின் ஒட்டுமொத்த செலவையும் குறைப்பதாகும். உயர்தர வேறுபடுத்தப்பட்ட ஷெல் ளிபொருள்கள், ஷெல் வாகன ப்ரீபெய்டு திட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கான சிறந்த கட்டுப்பாட்டை வழங்கும் ஷெல் டெலிமேட்டிக்ஸ் மற்றும் மோசடிக்கு எதிரான அதிக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த ஷெல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொகுப்பு உள்ளது.
60 ஆண்டுகளுக்கு மேலான உலகளாவிய வாகன மேலாண்மை வணிகம் மற்றும் 60 லட்சத்திற்கும் அதிகமான வாகன பிளீட் கார்டுகளின் அடிப்படையில்,
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷெல்லின் தீர்வுகள், நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த புதுமைகள் ஆகியவைவாகன உரிமையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
இது குறித்து ஷெல் நிறுவனத்தின் வாகன தீர்வுகளுக்கான மார்க்கெட்டிங் மற்றும் செயல்பாடுகளுக்கான வர்த்தக அபிவிருத்தி பொது மேலாளர் பர்மிந்தர் கோலி கூறுகையில்,
புதிய தொழில்நுட்பங்கள், சேவைகள், புதிய திறன்கள், புதிய வர்த்தக மாதிரிகள் மற்றும் புதிய திறமைமிக்கவர்களை ஒருங்கிணைப்பது என்பது வாகன துறையை மறுவடிவமைக்கும்.
இதன் காரணமாக வாகன உரிமையாளர்கள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறவும், தொழில் போட்டி, அதிக செயல்பாட்டு செலவுகள், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் அதிகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ளவும் சிரமப்படுகிறார்கள்.
வாடிக்கை யாளர்களுக் கான நிலையான இயக்க தீர்வுகளுக்கான முதல் தேர்வாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். அவர்களின் வாகன மேலாண்மை சிக்கல்களை புரிந்து கொண்டு, அதற்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் இதை நாங்கள் அடைய விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஷெல்லின் தனிப்பயனாக்கப்பட்ட மேம்பட்ட வாகன மேலாண்மை தீர்வானது, தொழில் நுட்பங்களை ஒன்றிணைத்து வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் சிக்கனம், நுகர்வு மீதான கட்டுப்பாடு, அவர்களின் வாகனங்கள் பற்றிய நிகழ்நேரத் தகவல்கள் மற்றும் வணிக ஆலோசனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இதன் காரணமாக அவர்களின் வணிக செயல் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.