அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வழக்கை முடித்து வைக்க நீதிமன்றத்தில் மனு


உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு எதிரான முறைகேடு புகார் தொடர்பான வழக்கை முடித்து வைக்க தலைமை செயலர் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த்துள்ளார்.


அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை எஸ்பி பொன்னி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மேற்பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு இருந்தது. 



இந்நிலையில், இவ்வழக்கு  விசாரணையை ஜன.7-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.