12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு


இவ்வாண்டின் 10,11,12 ஆகிய வகுப்புகளின் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதில், 


 12-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ந் தேதி வெளியிடப்படும். இதில் மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் தேர்வு எழுத உள்ளனர். 


11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்கிறது. இத்தேர்வின் முடிவுகள் மே 14-ந் தேதி வெளியிடப்படும். இதில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் எழுத உள்ளனர்.


10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி வரை நடக்கிறது.இத்தேர்வின் முடிவுகள்  மே 4-ந் தேதி வெளியிடப்படும். இதில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும் எழுத உள்ளனர் என்று தெரிவித்தார்.


மேலும், இந்த ஆண்டு பொது தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாளை படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.