சென்னை ,
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், அரக்கோணம், அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், 15 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டிடங்கள், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், ராஜலட்சுமி, எஸ்.பி. வேலு மணி, ஓ.எஸ்.மணியன், பாஸ் கரன், தலைமைச் செயலாளர் சண்முகம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.