அதிநவீன ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க டிரம்ப் ஒப்பந்தம்


புது டெல்லி,


         இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.


 பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, மக்களிடையேயான பிணைப்புகள் என இந்திய-அமெரிக்க உறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.


  இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ராணுவ ஹெலிகாப்டர்கள்  உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் டிரம்ப் 
கையெழுத்திட்டார்.


இதனை பற்றி செய்தியாளர்களிடம் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப் பேசுகையில் இந்திய - அமெரிக்க இடையே 
பாதுகாப்பை மையமாக வைத்து 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தெரிவித்தார்கள். 
மேலும் டிரம்ப் இந்தியாவின் விருந்தோம்பலை குறித்து மிகவும் மகிழ்ந்த்தாக தெரிவித்தார்.