நீர்நிலைகளை பாதுகாக்க 20 பொக்லைன் இயந்திரங்கள்

சிவகங்கை ,


நீர்நிலைகளை தொடர்ந்து பாதுகாக்க 20 பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டு தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


காளையார்கோவில் வட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் றையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவு தானியங்கள் சாகுபடி குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதை அவர் அங்குள்ள முன்னோடி விவசாயி கானா பாலமுருகன் விளை நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவர் கூறியதாவது மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 76 ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் தானிய வகை பயிர்கள் பயிரிட திட்டமிட்டு பணிகள் நடைபெறும்.


ஆனால், போதிய அளவு மழை கிடைக்காததாலும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறையாலும் விவசாய பணி தொய்வுடனேயே காணப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாசன கண்மாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் வரத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்றன.


இந்தப் பணியானது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் தலைமையில் குழு நியமித்து அதன் மூலம் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப பணிகளை திட்டமிட்டபடி முடித்திட பெரும் உதவியாக இருந்தனர் அந்த வகையில் ஒவ்வொரு பார்த்த நகரின் மையப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் ஆழப்படுத்தி அதிலிருந்த மண்ணை எடுத்து கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், மதகுகள் மடைகள் மற்றும் வரத்துக் கால்வாய் சீர் செய்யப்பட்டது. இதனால் அவ்வப்போது பெய்து வந்த மழை முழுமையாக கண்மாய்களை வந்தடைந்தன. அதனால் திட்டமிட்டபடி பருவத்திலேயே நடவு செய்தால் தற்போது நமது மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நெல் வகை உணவு தானியத்திற்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உணவு வகைகளுக்கு 32,000 மெட்ரிக்டன்னும் இலக்கில் உள்ளதே அதை 100% நிறைவேற்றும் வகையில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 400 மெட்ரிக்டன் உணவு தானியங்கள் உள்ளன.


இதில் நெல் உணவு தானியம் மட்டும் 2 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதன் மூலம் விவசாய பணி தொய்வின்றி முழுவீச்சில் நடைபெற்றது. அதுமட்டுமின்றி கண்மாய்கள் மற்றும் குளங்களில் போதிய அளவு தண்ணீர் தேங்கியதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி முதல் ஆகிய பகுதிகளில் நீர் உரிஞ்சும் தடுப்பணை அமைத்ததால் இந்த ஆண்டு வைகை ஆற்றில் போதிய அளவு விவசாய பணிக்கு தண்ணீர் வந்ததன் காரணமாக மேற்கண்ட தடுப்பணைகள் மூலம் தண்ணீர் தேக்கப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளன.


   


கடந்த ஆண்டு 250 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அதன் மேலும் 850 ஏக்கர் தரிசு நிலங்கள் சீர் செய்யப்பட்டு அதில் 32 ஆயிரம் மெட்ரிக் டன் சிறு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


ஊராட்சி ஒன்றிய பகுதியில் கற்போது 120 ஏக்கர் பரப்பளவில்  உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விவசாய பணிகள் கொள்ளப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். இதில் வேளாண் துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குனர் பன்னீர்செல்வம் வேளாண் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.