கோவை,
கோவை தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி 3வது முறையாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் எஸ். பி. வேலுமணி முன்னிலையில் சென்ற வாரம் கால்கோள் பூமிபூஜை நடைபெற்றது.
அதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். செட்டிபாளையம் பகுதியில் வாடிவாசல் அமைத்தல், பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடுவதற்காக அடுக்குப் படிகள் (கேலரி), வாகன நிறுத்துமிடம் இதுபோன்று பல்வேறு கட்டமைப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மாதம்பட்டி தங்கவேல், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.பி. அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.