நாமக்கல்,
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமனி இன்று நாமக்கல் பள்ளிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நாள் தோறும் 15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரிய எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் தேர்வுக்கான தேதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், உதவி பொறியாளர் மற்றும் உதவியாளர்கள் தேர்வு இன்னும் ஒரு மாதத்திற்குள் நடைபெறும் என்று அறிவித்தார்.