சென்னை-
குடியரிமை சட்ட திருத்ததை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கடந்த 4 நாட்களாய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. மேலும், சட்டம் அனைவருக்கும் நடுநிலையாக விளங்க வேண்டும். சிறுபான்மையின மக்களை குறி வைத்து தாக்க கூடாது என்று போராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.