சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் நிதீமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா அபராத தொகையான 10 கோடியை 4 ஆண்டு சிறைத்தண்டனை முடியும் வேளையிலும் செலுத்தலாம்.
மேலும், சசிகலா 10 கோடி அபராதத்தை காசோலை அல்லது வரவோலை மூலம் மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் அதில் முக்கியமாக அப்பணம் எவ்வாறு வந்தது என்பதை வருமான வரித்துறையினரிடம் சமர்ப்பித்து. தடையில்லா சான்று பெற்ற பின் மட்டுமே அபராதத்தை செலுத்த வேண்டும். அப்படி அவர் அபராதத்தை செலுத்த தவறினால் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அவர் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.